ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை
அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரித்ததை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள American interests மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கின் மிக முக்கிய பொருளாதார நாடான ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
இதையடுத்து, ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆறாவது நாளை எட்டியுள்ளன.
ஈரானிய இராணுவம்
இந்தநிலையில், குறித்த போராட்டக்காரர்களை ஈரானிய இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகள் அவர்களை பாதுகாக்க முன்வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி உற்பத்தியை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் பின்னர் போர் அமைதியை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 16 மணி நேரம் முன்