திருகோணமலை பல்கலைக்கழக மாணவர் படுகொலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல்
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
By Independent Writer
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெற்றது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குகிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுடரேற்றி அஞ்சலி
குறித்த சம்பவம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வழமைபோன்று அல்லாது இவ்வருடம் குறைந்த அளவு பொது மக்களே ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 16 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்