ஈரானிய தூதரின் கொழும்பு குரல்! U.S கடுகடு அனுரவை தாக்கும்!
திருவிளையாடல் என்ற 60 ஆம் ஆண்டின் புராணப்படத்தில் ஏழைப்புலவன் தருமி நாகேவும் சிவபெருமான் சிவாஜியும் விளையாடும் புலமை சோதிப்பில் வரும் வினாவான பிரிக்க முடியாதது எதுவோ? என்ற கருத்தியலில் இப்போது ஈழத்தமிழர்களுக்கு எதிர்மறையாக பொருந்தும் போல உள்ளது.
ஒருபுறத்தில் அவர்களின் அரசியல்வாதிகளையும் அலப்பறைகளையும் பிரிக்க முடியாதோ என்ற அவலம் இருக்க இன்னொரு புறத்தில் அவர்களின் சமகாலத்தையும் சமூகச் சீர்கேட்டுவிடயங்களையும் பிரிக்கமுடியாதோ என்ற கிலேசம் உள்ளது.
இந்த கிலேசநிலைகளை யாழிலும் மட்டக்களப்பிலும் அண்மையில் நடந்த பதின்ம பெண்களும் தொடர்புட்ட திகிலான விடயங்களும் வெளிப்படுத்துகின்றன. இதேபோல உலக நிலவரத்தில் அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ம்ப்பின் முடிவுகளையும் குண்டக்க மண்டக்க நிலவரங்களையும் பிரிக்கமுடியாது என்பது போல ரக்கோவும் ரம்பும் என்ற விசயமுமட உள்ளது.
ட்ம்ப்பின் முடிவுகளில் TACO என்ற ஒரு குறியீடு எள்ளலாக கூறப்படுவதுண்டு.
Trump Always Chickens Out ! என்பதே இந்த ரக்கோ என்ற குறியீட்டின் அர்த்தமாக அதாவது ரம்ப் எப்போதும் தனது முன்னைய முடிவுகளில் கோழைத்தனமாக பின்வாங்குவார் என்ற நிலை அவரது ஈரானிய மின்உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு விதித்த 48 மணிநேர காலக்கெடு நேற்று இறுதிநேரத்தில் மாற்றப்பட்டு 5 நாட்களுக்கு ஒத்திவைக்கும் முடிவும் வந்துவிட்டது.
ட்ம்பபின் முன்னைய யூவடிவத்திருப்பங்கள் எவ்வாறு இருந்தாலும் அவரது இந்த தாக்குதல் ஒத்திவைப்பு முடிவு உலகுக்கு கொஞ்சூண்டு ஆறுதல் அளித்ததாலும் எப்போது விக்கிரமாதித்தன் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறுமோ தெரியாது என்ற நிலை இருக்க, இலங்கையில் அண்மையில் பாண் உட்பட்ட சகல வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பேருந்துக்கட்டணங்கள் 12 வீதத்தால் உயர்த்தப்பட்ட விடயங்கள் உட்பட்ட நகர்வுகளை தாங்கிவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 17 மணி நேரம் முன்