அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு
அமெரிக்கா, சிரியா மற்றும் ஈராக்கில் நடத்திய தாக்குதல்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஈராக் பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன் 85க்கும் மேற்பட்ட போராளித் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தின.
அமெரிக்காவின் பதிலடி
தாக்குதலில், சிரியாவில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு
இந்த நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு சிரியாவின் வெளிவிவகார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது, அதன் இராணுவப் படைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டுகின்றன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |