அமெரிக்காவிற்கு ஈரானிய விமானபடைத்தளபதி கடும் எச்சரிக்கை
தனது இராணுவ சொத்துக்களை ஈரானுக்கு அருகில் நகர்த்துவதற்கு எதிராக அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் காப்ஸ் (IRGC) வான்வெளிப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே .
இஸ்லாமியப் புரட்சியின் 45 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பேரணியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாஜிசாதே, "நாங்கள் போர்வெறியர்கள் அல்ல, " என்று கூறினார்.
எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள
எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஈரானிய ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார், பெரிய ஈரானிய நாடு அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நடந்த போர்களில் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டொலர்களை வீணடித்துள்ளதாகவும், இப்போது காசா மீதான அதன் போரில் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் தளபதி குறிப்பிட்டார்.
அமெரிக்க மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்
"அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேலிய ஆட்சி கிட்டத்தட்ட 30,000 பேரைக் கொன்றது" என்று அவர் கூறினார்.
அமெரிக்க மக்கள், மேற்கு மற்றும் ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசாங்கங்கள் தங்கள் வரிப்பணத்தை செலவழிக்கும் விதம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |