தொடரும் கன மழை: நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
Floods In Sri Lanka
Flood
By Dharu
இலங்கையிலுள்ள பிரதான ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் மழைப்பொழிவு நிலவரம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (2026 அக்டோபர் 26 அன்று நள்ளிரவு 12:30 மணி நிலவரப்படி) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண நிலையில் இருந்தபோதிலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கெஹல்கமுக ஓயா மாற்றும், கலு கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்ககூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூர் பிரதேசம் மற்றும் இரத்தினப்புரி மாவட்டத்தின் கலு கங்கையை அண்டிய பகுதிகள் வெள்ளத்ததால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |