ஈரான் போரில் பின்வாங்குகிறதா அமெரிக்கா…! வீழுமா வல்லரசு கதாபாத்திரம்..!
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திவரும் நிலையில் அதன் ஆயுத இருப்பு முடிந்து விட்டதாகவும் எனவே ஈரான் போரிலிருந்து அது பின்வாங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அமெரிக்கா என்பது உலகின் மிகப்பெரிய இராணுவ கட்டமைப்பை கொண்டுள்ள ஒருநாடு.அமெரிக்காவிற்கு வெளியே 800 இராணுவ தளங்களை கொண்டுள்ளது அந்நாடு.
இவ்வாறு பலம்பொருந்திய அமெரிக்கா, ஈரான் போரில் ஒருமாதமே போர் தொடங்கிய நிலையில் அதன் ஆயுத கையிருப்பு முடிந்து விட்டதாக வெளிவரும் முட்டாள்தனமான ஆய்வு வேறொன்றும் இருக்க முடியாது.
யுத்தம் என்பது அமெரிக்காவிற்கு எப்பொழுதும் ஒரு முதலீடாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்கா , அமெரிக்காவாக இந்தப்பூமியில் வலம் வரவேண்டுமென்றால் ஈரானுடனான போரில் என்ன விலை கொடுத்தாவது வென்றுதான் ஆகவேண்டும்.
இந்த உலகத்தை மிரட்டி வல்லரசு கதாபாத்திரத்தை தொடர்ந்து தக்க வைக்கவேண்டுமென்றால் ஈரானை எப்பாடுபட்டாவது அது வீழ்த்தித்தான் ஆகவேண்டும்.
அதனைச் செய்வதற்கு எந்தவித இரக்கமுமின்றி அமெரிக்கா அதனை செய்யும். தான் எதிர்காலத்தில் கொழுத்த முதலீட்டை அடைவதற்கு ஒருபோதும் ஈரானை விட்டு அமெரிக்கா வெளியேறாது.
இந்த யுத்தத்தின் பின்னணியில் உள்ள மேலும் பல தகவல்களை தாங்கி வருகிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்