ஈரானில் பலரை பலியெடுத்த குண்டுத்தாக்குதல்:உரிமை கோரியது ஐஎஸ் அமைப்பு
ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின்ஆண்டு நிறைவு நிகழ்வில் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு (ஐஎஸ்) உரிமை கோரியுள்ளது.
வியாழன் காலை தெற்கு ஈரானில் உள்ள கெர்மானில் நடந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஈரானின் குற்றச்சாட்டு
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருந்திருக்க வேண்டும் என்று ஈரான் முதலில் கூறியது.
டெலிகிராமில் அதன் சனல்கள் மூலம் ஐஎஸ் உரிமை கோரியது. பின்னர் அதன் செய்தி நிறுவனமான Amaq இல் முகமூடி அணிந்த இரண்டு நபர்களைக் காட்டும் ஒரு படத்தை வெளியிட்டது, அவர்கள் தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறியது.
தற்கொலைதாரிகள்
முதல் தற்கொலை குண்டுதாரி தனது வெடிகுண்டு பெல்ட்டை மக்கள் மத்தியில் வெடிக்கச் செய்ததாகவும், இரண்டாவது குண்டுதாரி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு தனது வெடிகுண்டுகளைத் வெடிக்கச் செய்ததாகவும் அந்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை "ஒமர் அல்-முவாஹித்" மற்றும் "சய்புல்லா அல்-முஜாஹித்" என்று ஐஎஸ் பெயரிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஈரானியர்களா அல்லது வெளிநாட்டவர்களா என்பதைக் கண்டறிவது கடினமாக்கும் பொதுவான பெயர்கள் இதுவாகும்.
சமீப ஆண்டுகளில் ஈரானில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது ஐ.எஸ்.தாக்குதல்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |