ஜேர்மன்,இங்கிலாந்திலிருந்து வந்த பொதிகள் :சுங்க அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி
ஜேர்மன் மற்றும் இங்கிலாந்திலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்ட 11 பொதிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைப்பற்றி சோதனை நடத்தியதில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை அந்த பொதிகளில் இருந்து மீடடுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சிவலி அருக்கொட இன்று (4) தெரிவித்தார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 11 பொதிகளை பரிசோதித்துள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில்
இதன்போது, ஜேர்மன் மற்றும் இங்கிலாந்தில் இருந்து கொழும்பு, நுகேகொடை, பாணந்துறை, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதை மருந்துகளின் சந்தை மதிப்பு
இவ்வாறு அனுப்பப்பட்ட முகவரிகள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த பொதிகளில் இருந்து 'எக்டசி' அடங்கிய 1055 மாத்திரைகள், 318 கிராம் குஷ் மற்றும் 15 கஞ்சா விதைகள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த போதை மருந்துகளின் சந்தை மதிப்பு சுமார் 13 மில்லியன் ரூபா எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |