தன்னை சந்திக்க வருபவர்களிடம் அரசியலை தவிர்க்கும் கோட்டாபய
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Sumithiran
அரசியல் பிரவேசம் இல்லை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட அவர் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அரசியலுக்கு வருவது குறித்து கவலைகள்
அவருடனான உரையாடல்கள் அரசியல் இல்லாமல் பொதுவான தகவல்கள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
அரசியலுக்கு வருவது குறித்து அவருக்கு சில கவலைகள் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் புரட்சியை அடுத்து மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து என சுற்றித்திரிந்த கோட்டாபய அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஒரு சாராரும் வேண்டாம் என மற்றொரு சாராரும் வாதப்பிரதிவாதங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி