நாடுமுழுவது ஊரடங்குச் சட்டமா? காவல்துறை திணைக்களம் வெளியிட்ட தகவல்
Police
Ajith Rohana
Economy
SriLanka
Curfdew
By Chanakyan
ஏப்ரல் 3 ஆம் திகதி நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய நாளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு - இதனால் பொதுப்போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி