எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமா? வெளிவந்த அறிவிப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபாருள் பற்றாக்குறையால் நாளாந்தம் எரிபொருள் நிரப்பு நிலையங்களக்கு முன்னால் மக்கள் தமது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர்.
அவ்வாறு நிற்கின்றபோதிலும் எரிபொருள் முடிந்து விட்டால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்படும் நிகழ்வு வழமையாகி விட்டது.
இந்த நிலையில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
114,000 மெட்ரிக் தொன் டீசலும், 60, 000 மெட்ரிக் தொன் பெற்றோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 40,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளது. மேலதிக டீசல் ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் கிடைக்கப்பெறும்.
எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்பவர்கள் முன்னர் தாம் பெற்றுக்கொண்ட அளவினை காட்டிலும், தற்போது அதிகளவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)