டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி டுபாயில் நலமுடன் இருப்பதாக, குறித்த கொலையின் மற்றுமொரு சந்தேகநபரான கெஹல்பத்ர பத்மே தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார் கடந்த 9 ஆம் திகதி, இலங்கையின் முக்கிய ஊடகங்கள் மலேசியாவில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக கெஹல்பத்தர பத்மேவுடன் தொலைபேசியில் பேசிய தகவலை தென்னிலங்கை செய்தித்தால் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளன.
கேள்வி
"நீங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன். மற்றையவர் சிவப்பு பிடியாணை பிரப்பிக்கப்பட்டவர். நீங்கள் இருவரும், மலேசியா காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் எப்படி அங்கிருந்து தப்பித்தீர்கள்?
பதில்
"யார் கூறியது. நான் மலேசியாவில் கைது செய்யப்பட்டேன் என்று?”
இது வெறும் நாடகம்
கேள்வி
""நீங்கள் மட்டுமல்ல, உங்களது மனைவி, மகன் மற்றும் கமாண்டோ சலிந்தவும் கைது செய்யப்பட்டனர். அது பற்றிய தகவல்கள் நாட்டின் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கூட வெளியிடப்பட்டன. இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்
"ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதால் நான் கைது செய்யப்பட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது வெறும் நாடகம். அது யாருடைய திட்டமிடல் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. நான் அப்படிக் கைது செய்யப்பட்டிருந்தால், என்னையும் என் குடும்பத்தையும் ஏன் மலேசியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வர முடியவில்லை?
கேள்வி
நீங்கள் பொய் சொல்லுவதாக தெரிகிறது. இல்லையென்றால் கைது அறிவிக்கப்பட்டபோது அது பொய் என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?
பதில்
"முதலில் ஹரக் கட்டாவின் மனைவி என் காதலி அல்ல. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். நாங்கள் துபாயில் சந்தித்தோம். அவர், என் சிறந்த தோழி. அதைத் தாண்டி எங்களுக்கு எந்த உறவும் இல்லை. நாங்கள் இன்னும் நல்ல நண்பர்கள். நான் கைது செய்யப்படவில்லை என்று முதலில் சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியாக இருந்தேன். மற்றவர்கள் சில மணி நேரம் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க அனுமதித்தேன்.
மலேசியாவில் இல்லை
கேள்வி..
அப்படியென்றால் மலேசியாவில் நீங்கள் இல்லையென்றால் இப்போது நீ எங்கே இருக்கின்றீர்கள்?
பதில்..
"நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்று ஏன் கேட்கின்றீர்கள். நான் என் குடும்பத்துடன் ஒரு நாட்டில் இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். பாதுகாப்புப் படையினரால் முடிந்தால் என்னைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்.
கேள்வி..
"இந்த குற்றங்கள் எப்போது முடிவுக்கு வரும்? ஏன் சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு இப்படி வேலை செய்கிறீர்கள்?
பதில்..
என் தந்தை இறந்த நாளில் நான் சட்டத்தை கையில் எடுத்தேன். என் தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்குவதற்காகத்தான்.
இஷாரா எங்கு உள்ளார்
கேள்வி..
இஷாரா எங்கு உள்ளார்?
பதில்..
"அவர் இப்போது டுபாயில் நன்றாக இருக்கிறார். விரைவில் அவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வார்கள்." ஆனால் மறுபடியும் யாராவது என்னுடன் மோத வருவார்களாக இருந்தால். நான் அவர்களை விடமாட்டேன்.
கேள்வி..
அப்படியென்றால் இஷாரா செவ்வந்தி என்ன செய்ய போகிரார்?
பதில்..
"அதை சிலநாட்களில் தெரிந்துக்கொள்ளலாம். இப்போது அது தொடர்பில் கூறுவது சிறந்ததாக இருக்காது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
