பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா: முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!
ஹைதராபாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்த திட்டமிட்டிருந்த குண்டு வெடிப்பு தாக்குதலை இந்திய காவல்துறை முறியடித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை இந்திய காவல்துறை கைது செய்துள்ளதாக அந்சாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்போது, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் சிராஜ், சமீர் என்ற இரு சர்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தகவல்
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த பயங்கரவாத தாக்குதலின் ஒரு பகுதியாக சிராஜ் என்ற சந்தேகநபர் விஜயநகரில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சவுதி அரேபியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவிடமிருந்து ஹைதராபாத்தில் தாக்குதல்களை நடத்த சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தாக்குல்
அண்மையில் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பில் விரிவான தேடல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இந்த காலப்பகுதியில் உலக அழகுராணி போட்டி நடைபெற்று வருகிற நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகரனும் அதில் பங்குபற்றியுள்ளார்.
குறித்த போட்டியின் இறுதிப் போட்டியும் மே 31 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு 140 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
