நாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியானது கோட்டாபயவின் அறிவிப்பு
srilanka
isolation
corona
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதை அடுத்து மீண்டும் நாடு முடக்கப்படுமா என்ற கேள்விக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
கிராமத்துடன் கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த பதிலை அளித்துள்ளார்.
நிகழ்வின் இறுதியில், அரச அதிகாரிகள் நாட்டை முழுமையாக முடக்க ஏதாவது தீர்மானம் உள்ளதா என கேட்டுள்ளனர் எனினும் இல்லை என்று பதிலளித்த ஜனாதிபதி, நாட்டை முழுமையாக மூடாமல், கொரோனா தொற்று அதிகரிக்கின்ற இடங்களை மாத்திரம் முடக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்