அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் படையெடுப்பு : உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்
காசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் படையெடுத்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை ஜெனிவாவில் ஒரு மாநாட்டின் போது தெரிவித்தார்.
"காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவப் படையெடுப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று அவர் கூறினார்.
"மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல"
"மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல" என அவர் தெரிவித்தார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள், பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் "எந்தவொரு போரிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கெப்ரேயஸ் சுட்டிக்காட்டினார்.
“No third party or international organization was permitted to be present inside, which raises doubts about any Israeli narrative that would be released later.”https://t.co/vn3wbjZ8Lp pic.twitter.com/qF60yCSWUk
— The Palestine Chronicle (@PalestineChron) November 15, 2023
மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும் "அல்-ஷிஃபாவில் உள்ள மருத்துவ பணியாளர்களுடன் தொடர்பை இழந்துவிட்டதாகவும்" அவர் கூறினார்.
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தை புதன்கிழமை தாக்கிய இஸ்ரேலியப் படைகள், அதை இராணுவ முகாம்களாகவும் தடுப்பு மையமாகவும் மாற்றியது.
9,000 க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில்
காசா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின்படி, நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
Israeli soldiers found no hostages during searches of the Al-Shifa Medical Complex in Gaza City, Sky News Arabia reported, citing Israeli sources.https://t.co/zOCNwtZOWn pic.twitter.com/mrGb596ATN
— The Palestine Chronicle (@PalestineChron) November 15, 2023
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் இதுவரை 4,710 குழந்தைகள் உட்பட 11,500 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி முழுவதும் பொதுமக்களின் வீடுகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது, முற்றுகையிடப்பட்ட எல்லா இடங்களிலும் புதிய படுகொலைகள் பதிவாகியுள்ளன.