ஹிஸ்புல்லா தளபதியைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் பாரிய குண்டுவீச்சு
இஸ்ரேலியப் படைகள் இன்று (06) புதன்கிழமை இரண்டாவது முறையாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து நடத்திய பாரிய குண்டுவீச்சு தாக்குதலில், பெரும் வெடிப்புச் சத்தமும், பாரியளவிலான சேதமும் ஏற்பட்டதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலை உறுதிசெய்ததுடன் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையின் தளபதியான மாலிக் பலூவைக் குறிவைத்ததாகக் கூறியது.
தாக்குதலை உறுதி செய்த நெதன்யாகு
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதலை உறுதிசெய்து, தானும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸும் இந்தத் தாக்குதலை நடத்துமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார். "

இஸ்ரேலியக் குடியிருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) வீரர்களைக் காயப்படுத்துவதற்கும் ரத்வான் பயங்கரவாதிகளே பொறுப்பு.
இஸ்ரேலின் நீண்ட கரம் ஒவ்வொரு எதிரியையும் பிடிக்கும்
எந்தப் பயங்கரவாதிக்கும் விலக்கு இல்லை – இஸ்ரேலின் நீண்ட கரம் ஒவ்வொரு எதிரியையும் கொலையாளியையும் பிடிக்கும்," என்று நெதன்யாகு டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

"வடக்குப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பைக் கொண்டுவருவதாக நாங்கள் உறுதியளித்தோம் – இப்படித்தான் நாங்கள் அதைச் செய்கிறோம், இப்படித்தான் செய்வோம்!" என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |