சர்வதேச சட்டத்தை நசுக்கிய இஸ்ரேல்...! ஐ.நா தலைமையக இடிப்புக்கு வலுக்கும் கண்டனம்
ஜெருசலேமில் உள்ள ஐ.நா. பலஸ்தீன அகதிகள் அமைப்பு வளாகத்தை இஸ்ரேல் இடித்தமைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை இது தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான வளாகக் கட்டடங்களை இஸ்ரேல் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.
மனிதாபிமான உதவி
அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றிய பிறகு, புல்டோசர்கள் மூலம் அங்கிருந்த பெரிய மற்றும் சிறிய கட்டடங்களை இஸ்ரேல் இடித்ததாக ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் போவ்லர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட மீறல் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது இஸ்ரேல் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2025 தொடக்கத்தில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகமையின் செயல்பாடுகள் இஸ்ரேலில் தடை செய்யப்பட்டன.
இதன் மூலம் பலஸ்தீனர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.
மேலும், இதனைத் தாண்டியும் உதவி செய்த 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |