விறுவிறுப்பாக இஸ்ரேல் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம் - 77.7 சதவீத வாக்குப்பதிவு
Benjamin Netanyahu
Israel
Election
World
By Pavi
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் மற்றும் அட்டவணைப்படுத்தும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை 15 வாக்குச்சாவடிகளில் பதிவான 2,670 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அண்மைய தகவல்களின்படி, தேர்தலில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
77.7 சதவீத வாக்குகள்
இந்நிலையில், தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு இஸ்ரேலிய மக்களிடையே மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அதிகரித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |