இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட ஐ.நா அவசர கூட்டம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போரினால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10 வது அவசர சந்திப்பு ஒக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுசபையின் உறுப்பு நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன.
ரஷ்யா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம்
இக்கோரிக்கையை ஏற்று அவசர கூட்டம் வரும் 26 ஆம் திகதியன்று நடத்தப்படும் என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2022 பெப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.
உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.