இஸ்ரேல் இன அழிப்பையே செய்கிறது: பிரேசில் கண்டனம்
காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா த சில்வா வன்மையாக கண்டித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்திலே இது தொடர்பான பதிவொன்றினையும் இன்று (24) அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், இஸ்ரேலின் தாக்குதல்கள் இனவழிப்பை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இனவழிப்பு
அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் என்பதைத் தாண்டி ஒரு இனவழிப்பாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Da mesma forma que eu disse quando estava preso que eu não aceitaria acordo para sair da cadeia e que eu não trocaria a minha liberdade pela minha dignidade, eu digo: não troco a minha dignidade pela falsidade. Eu sou favorável à criação do Estado Palestino livre e soberano. Que…
— Lula (@LulaOficial) February 23, 2024
தவிரவும், காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் லுலா த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான போர் நிறுத்தம்
இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் தான் வெளியிட்ட அறிக்கையை ஆராயுமாறும் இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்களுக்கமைய தன்னை மதிப்பிட வேண்டாமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |