காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!
காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், சுமார் 158 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் காசாவில் மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் நேற்றைய தினம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
முற்றுகையிடப்பட்ட காசா
இதேவேளை, முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உணவு, உடை மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உலக உணவுத்திட்டம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான காசாவில உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |