உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதல், இரு தரப்புக்கும் இடையேயான முழுமையான போராக மாறியது.
சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்தப் போர் இன்று 11ஆவது நாளை எட்டியுள்ளது.
உருக்குலைந்த காசா
ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிப்பது என்ற உறுதியுடன் போரில் குதித்திருக்கும் இஸ்ரேல், போர் விமானங்கள் மூலம் காசா மீது தொடர்ந்து ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி வருகிறது.
24 மணி நேரமும் நீடிக்கும் இந்த குண்டு மழையில் சிக்கியுள்ள காசா நகரம், முற்றிலும் நிலைகுலைந்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் தாக்குதலை நீடித்து வருகின்றனர். இது அங்கும் பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 10 நாட்களாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியிலேயே இருக்கும் காசா மக்களின் துயரம் மனசாட்சி உள்ள அனைவரின் இதயத்தையும் உலுக்குவதாக உள்ளது.
மரண வேதனை
அங்கு உணவு, நீர், மருந்து, மின்சாரம் என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், ஏவுகணைகளுக்கு இருப்பிடங்களை பறிகொடுத்து உறைவிடமும் இன்றி எந்த நேரத்தில் எது நிகழுமோ? என நொடிக்கு நொடி மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
இதேவேளை, பிணங்களை கையாள முடியாமல் தவித்து வருவதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை வெளியிட்டு உள்ளது.
பிணங்களை வைக்கும் பைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மைய பணிப்பாளர் பிலிப் லாசரினி கிழக்கு தெரிவித்தார்.