இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: ஒவ்வொரு 30 நொடிக்கும் பீரங்கி துப்பாக்கிச் சூடு
தற்போது நடைப்பெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காஸா மீது இஸ்ரேல் இதுவரை 6,000 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காஸாவின் முக்கிய பகுதிகளில் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் இஸ்ரேல் வீசியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலானது ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்க முடிவெடுத்துள்ள நிலையில் காஸா மீது இஸ்ரேல், 30 நொடிகளுக்கு ஒருமுறை தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதல்
கடுமையான தாக்குதலை முன்னனெடுத்து வரும் இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை காஸா பகுதியில் குவித்துள்ளதோடு 300,000 வீரர்களையும் தயார் செய்து வைத்துள்ளது.
இஸ்ரேல் துருப்புக்கள் காஸா எல்லையில் 150 மிமீ பீரங்கிகளை நிலைநிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுடப்படும் ஒவ்வொரு முறையும் நிலம் நடுங்குவதாகவும் காதைப் பிளக்குமளவு சத்தம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினர்
இஸ்ரேல் ராணுவ வீரர் மிக விரைவில் காஸா பகுதியில் இருந்து இனி எவரும் தாக்குதல் முன்னெடுக்காதவாறு சூழலை உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போரில் இதுவரை பாலஸ்தீன் தரப்பில் 1,350 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியது போல, ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this