வலுக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! அமெரிக்க அதிபர் எடுத்துள்ள நடவடிக்கை
Joe Biden
France
Netherlands
Israel-Hamas War
By Vanan
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் இத்தாலிய தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விவாதிக்கவுள்ளார்.
இன்று(22)ஞாயிற்றுக்கிழமை இதற்கான அழைப்பை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் சந்தித்துப் பேசிய பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அடுத்த வாரம் விஜயம்
இதேவேளை, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வார்கள் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தலைவர்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெதன்யாகுவை சந்திப்பார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி