இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளின் இரண்டாவது தோல்வி!
காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என கூறப்படுகின்ற அல்ஷிபா வைத்தியசாலை விவகாரம் என்பது, இஸ்ரேலிய புலனாய்வு பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்க்கொண்ட இரண்டாவது, மிகப்பெரிய தோல்வி என்றே கூற வேண்டியுள்ளது.
ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ஒருங்கிணைந்த அதிரடி தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்பதை கவனிக்க தவறியிருந்ததுதான், இஸ்ரேலிய அண்மைக்கால வரலாற்றில் அதனது புலனாய்வு பிரிவு பெற்ற மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது.
ஹமாஸின் கட்டளை தளம்
அதேபோன்று, காசாவின் அல்ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸின் கட்டளை தளம் இருப்பதாக, இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் கூறி வந்த போதும், அப்படி எதுவுமே அவ்வைத்தியசாலையில் கண்டுப்பிடிக்க முடியாமையானது இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் அண்மைக்காலமாக முகங்கொடுத்துவரும் மிகப்பெரிய தோல்வி எனலாம்.
தேவையான ஒரு விடயத்தை கூற தவறியதால், முதல் தோல்வியையும், மற்றொரு விடயத்தை தேவையே இல்லாமல் கூறி வந்ததால் இரண்டாவது தோல்வியையும் சந்தித்துள்ளது இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள்.
காசாவின் அல்ஷிபா வைத்தியசாலையில் கட்டளை பீடம் செயற்பட்டு வருவதாகவும், இஸ்ரேலிலிருந்து ஹமாஸினால் கடத்தி செல்லப்பட்ட பணயக்கைதிகளை ஹமாஸ் அவ்வைத்தியசாலையில் மறைத்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் தனது புலனாய்வு பிரிவுகளை ஆதாரம் காண்பித்து தொடர்ந்து கூறி வந்ததது.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பென்டகனும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் கூட, இத்தகவல்களை உறுதிப்பட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை ஐ.பி.சி தமிழின் நிதர்சனம் நிகழ்ச்சியின் வாயிலாக காணலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளம்: அரச திணைக்களங்களின் அசண்டையீனமுமே காரணம் என மக்கள் விசனம்(படங்கள்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |