லெபனான் மீது ஊடுருவ தயாராகும் இஸ்ரேல்: தீவிர கண்காணிப்பில் அமெரிக்கா
லெபனான் (Lebanon) மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் (Israel) முன்னெடுத்துள்ள தாக்குதல் சம்பவங்களை அமெரிக்க (United States) அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் முன்னெடுத்த இருவேறு நூதன தாக்குதல் சம்பவத்தால் ஹிஸ்புல்லா (Hezbollah) படைகள் மட்டுமின்றி, லெபனான் நாடும் நடுக்கத்தில் மூழ்கியுள்ளது.
தற்போதுள்ள நிலைமையில் லெபனான் மீது ஊடுருவல் நடத்தவோ அல்லது ஒரு முழுமையான படையெடுக்கவோ இஸ்ரேல் முயற்சிக்கவில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
லெபனானில் இரண்டு நாட்களாகத் தொடரும் மனித வேட்டை! உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலிய உளவு அமைப்பு!!
ஹிஸ்புல்லா பதிலடி
இருப்பினும், ஹிஸ்புல்லா படைகள் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள் வெடித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து பதிலடி எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்திற்கான ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் பயிற்சி என அனைத்தையும் அமெரிக்காவே இதுவரை முன்னெடுத்து வருகிறது.
லெபனானில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என ஈரானிடம் (Iran) ரகசியமாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் லெபனானில் உள்ள அமெரிக்க மக்கள் கவனத்துடன் இருக்க அழைப்பு விடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |