ஈரான் விடுத்துள்ள மிரட்டல் : உச்சபட்ச தயார் நிலையில் இஸ்ரேல்
United States of America
Israel
Iran
By Sumithiran
கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உடபட 12 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்திருந்தது. இஸ்ரேல் மீது நேரடி இராணுவத் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு
எனவே இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பு தயார் நிலையை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் அமெரிக்காவும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி