ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
காசாவின் வடக்கு பகுதியில் இன்று புதன்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகன்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய ஹமாஸ் தலைவர்
அல் ஜசீரா அரபுக்கு அளித்த பேட்டியில் ஹனியே, தனது மகன்களான ஹஸீம், அமீர் மற்றும் முகமது மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
போர் தொடங்கியதில் இருந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டனர்.
தியாகிகளின் இரத்தம் மற்றும் காயமடைந்தவர்களின் வலி மூலம்
பலஸ்தீனிய தலைவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடுகளை குறிவைத்தால் அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
தியாகிகளின் இரத்தம் மற்றும் காயமடைந்தவர்களின் வலி மூலம், நாங்கள் நம்பிக்கையை உருவாக்குகிறோம், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறோம், எங்கள் மக்களுக்கும் நமது தேசத்திற்கும் சுதந்திரத்தைஉருவாக்குகிறோம்," என்று ஹனியே கூறினார்.
தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் படைத்தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |