ஈரானுக்கு பேரிழப்பு : இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி
ஈரான் மீது இஸ்ரேல் நேற்று(08) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் வான் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் பஹ்மான் ஹொசைனி மற்றும் அலிரெஸா அபிரி என IRIB அடையாளம் காட்டியுள்ளதுடன், அவர்களுக்கான இறுதிச் சடங்கு செவ்வாயன்று நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
வான்வெளியைப் பாதுகாக்கும் பணியின்போது சம்பவம்
"நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும்" ஒரு பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவரும் கொல்லப்பட்டதாக அந்த ஒளிபரப்பு நிறுவனம் கூறியது.

தொடர்ந்து போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசியதால் இந்த மோதல் தீவிரமடைந்தது.
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இதைத் தொடர்ந்து, ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், ஈரான் மீது பல கட்டங்களாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. திங்களன்றும் சண்டை தொடர்ந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான தனது தாக்குதலை நிறுத்துவதாக ஈரானிய இராணுவம் அறிவித்ததுடன், லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்