நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் (Lebanon) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான விதிக்கப்பட்டிருந்த முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் நுழைய முயன்றபோது 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 124 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |