ஈரானின் அணு ஆயுத ஆலையை குறிவைத்தது இஸ்ரேல் : பச்சைக்கொடி காட்டிய ட்ரம்ப்
ஈரானில்(iran) உள்ள அணு ஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் (israel)திட்டம் தீட்டி வரும் நிலையில் அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) பச்சைக்கொடி காட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் ட்ரம்ப்
புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல், ஈரானில் உள்ள அணு ஆலைகளை கண்டுபிடித்துள்ளது. இந்த ரகசிய பகுதியின் வரைபடமும் இஸ்ரேல் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் மத்தியில் தாக்குதல்
இந்த ஆண்டின் மத்தியில் ஈரானில் உள்ள அணுஆயுதங்கள் மீது ஏவுகணை வீசி இந்த ஆண்டின் மத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பு அவசியம் என அமெரிக்க வெள்ளை மாளிகையிடம் உதவி கோரியுள்ளது. இதற்கு டிரம்ப் அரசு பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிகிறது.
இத்தகவலை அமெரிக்க உளவுத்துறை மேற்கோள் காட்டி அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
