காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி)
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேலியத் துருப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் தமது தரைப்படை நகர்வை விரிவுபடுத்திய நிலையில், தற்போது வடக்கு காசாவுக்கும் தெற்கு காசாவுக்கும் இடையிலான ஒரு முக்கிய வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இடைமறித்துள்ளன.
இந்த வீதி இடைமறிப்புச் செய்ததன் காரணமாக இந்த வீதியூடான பலஸ்தீன மக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்;டுள்ளது
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு காசாவில் தற்பொழுது தமது துருப்புகள் நிலைகொண்டுள்ள இடங்களின் விபரங்கை வெளியிட மறுத்த போதிலும், காசாவின் முக்கிய பாதையை இஸ்ரேலிய போர்தாங்கிகள் அடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தாக்குதல்கள்
இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் தற்போது காசா நகரின் புறநகர்ப் பகுதியில் இருப்பதாகவும், வடக்கிலிருந்து தெற்கே செல்லும் ஒரு முக்கிய வீதியை அவை இடைமறித்து நிற்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
தற்போது காசா பகுதிக்குள் கவச வாகன அணியுடன் கூடிய காலாட்படை தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும், தரைவழித்தாக்குதல்களை நடத்துவதற்கு உதவும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவுகளும் காசாவிற்கு அனுப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணும் குறிப்பிட்டுள்ளது
இந்த நிலையில் சலா-அல்-தின் வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் குறுக்கறுத்து நிற்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை மக்கள் அனுப்பி வருகின்றனர்.
குhசாவின் வடக்கில் உள்ள பாலஸ்தீன மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தெற்கே வெளியேற இஸ்ரேலால் கூறப்பட்ட இரண்டு வழிகளில் சலா-அல்-தின் வீதியும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலையும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல உந்துகணைகள் ஏவப்பட்டன.
இஸ்ரேலிய இராணுவம் காசா மீது மூன்று வாரங்களுக்கும் மேலாக தீவிரமான குண்டுவீச்சுக்களை நடத்திய போதிலும், ஹமாஸ் இன்னும் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது உந்துகணைகளை ஏவும் திறனைக் கொண்டிருப்பதை இந்த புதிய தாக்குதல்கள் நிரூபித்துள்ளன.
இஸ்ரேலை நோக்கி உந்துகணைகளை ஏவும் ஹமாசின் உட்கட்டமைப்பை அழிப்பது காசா மீதான தனது இராணுவ நடவடிக்கையின் முன்னுரிமைகளில் ஒன்றென இஸ்ரேலிய இராணுவம் கூறியிருப்பது சுட்டிக்காட்த்தக்கது.
காசாவில் ஒரு கார் இஸ்ரேலிய படைகளால் தாக்கப்படுவதைக் காணலாம்.
முதலாம் இணைப்பு
காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் துருப்புகள் இன்று (30) கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் படைகள் கவச வாகனங்களுடன் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
காசாவின் ஷிஃபா (Shifa), ஆல்-கூட்ஸ் (Al-Quds) மருத்துவமனைகளுக்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காசாவின் வடக்கு பகுதியில், கடுமையான மோதல்கள் நடந்து வரும் நிலையில், காசா மக்கள் அவசரமாக வடக்கில் இருந்து தெற்கை நோக்கி உடனே செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.
இதேவேளை, காசாவில் இஸ்ரேல் படைகளுடன் நடந்த மோதலில் 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, காசாவில் 600 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.