காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி: மீட்கப்பட்ட உடல்கள்
தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு 200 இற்கும் மேற்பட்டொரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
கடுமையான போர்
அதனை தொடர்ந்து, இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்க முடிவு செய்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
பணயக் கைதிகளின் உடல்கள்
இந்த நிலையில், மீதமுள்ள பணயக் கைதிகளை மீட்க ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்களை இஸ்ரேல் இராணும் நடத்தி வருகிறது.
இதன் படி, தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது இஸ்ரேலின் 06 பணயக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |