திருப்பியடித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
12 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வான் தாக்குதல்
குறித்த தாக்குதல்களினால் ஹிஸ்புல்லா அமைப்பினரின் வான் பாதுகாப்பு படையில் பணியாற்றிய பொறியியலாளர் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் இந்த வான் தாக்குதலானது, எல்லையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபு அல் அஸ்வாத் என்ற கடலோர பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு
அத்தோடு, தங்கள் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து லெபனானில் இதுவரை 378 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதில் பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |