ட்ரம்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லெபனானில் போர் நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தபோதும் தற்போது இஸ்ரேலிய படைகள் பிராந்தியத்தில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனானில் உள்ள டெய்ர் - ஆமெஸ் பகுதிகளில் இவ்வாறு இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய இராணுவம், குடியிருப்பாளர்கள் குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குச் செல்ல வேண்டும் என்று கூறி, கட்டாய வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல்
இந்நிலையில் தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள், வீடுகள் இடிக்கப்படுதல் மற்றும் நிலப்பரப்பு தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல் ஆகியவை நடந்துவருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லாவும் தெற்கு லெபனானுக்குள் இருந்த இஸ்ரேலியப் படைகள் மீதும், எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள்ளும் ஏவுனணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பதிலடி தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்