இரக்கமின்றி அரக்க வேலை புரியும் இஸ்ரேல் : பரிதாபமாக உயிரிழக்கும் காசா வாசிகள்!
வடக்கு காசா பகுதியிலிருந்து பலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என கடந்த 13 ஆம் திகதி பகிரங்கமான அறிவிப்பினை இஸ்ரேல் அரசு வெளியிட்டிருந்தது.
ஆனால், இஸ்ரேல் விடுத்த காலக்கெடுவுக்குள் அங்கிருந்து எல்லா மக்களையும் வெளியேற்றுவது இயலாத காரியம் என ஐக்கிய நாடுகள் சபை பலமுறை அறிவித்திருந்தது.
கர்ப்பிணிகள், குழந்தைகள், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், இஸ்ரேல் குண்டுகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என எல்லோரையும் வெளியேற்றுவது கடினம் என பல சர்வதேச அமைப்புகளும் அறிவிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டுகளை வீசி
அப்படியிருந்தும் காசாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்த மக்களை இஸ்ரேல் அரசு தாக்கியுள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான மன்னிப்புச்சபை உறுதி செய்துள்ளது.
வடக்கு காசாவில் இருந்து வெளியேற சலாஹ்-அல் தீன் வீதி பாதுகாப்பானது என இஸ்ரேல் அறிவித்ததற்கு அமைய மக்கள் அந்த வீதியூடாக இடம்பெயர சித்தமாயினர்.
அதன்படி, முப்பதுக்கும் மேற்பட்ட மக்களை ஏற்றிச்சென்ற வாகனம், பெண்கள், குழந்தைகள் சென்ற எட்டு கார்கள் என அந்த வீதியில் சென்ற பலஸ்தீன மக்களை குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்கியிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் சுமார் 70க்கும் குறையாமல் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதன் போது மக்களைப் பாதுகாப்பாக காக்க வந்த அம்புலன்ஸையும் இஸ்ரேல் தாக்கி அட்டூழியம் புரிந்துள்ளது.
எந்த இடமும் பாதுகாப்பில்லை
இதனால் காசாவிலேயே இருந்துவிடலாம் என மக்கள் கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எந்த இடமும் பாதுகாப்பில்லை என்பதே தற்போது காசாவில் இருக்கும் யதார்த்தமான சூழல் என்றும், பாதுகாப்பான இடம் நோக்கி நகருங்கள் என அறிவித்துவிட்டு, அந்த பாதுகாப்பான வீதியிலேயே குண்டுகளை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம் எனவும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
11 லட்சம் பலஸ்தீனியர்களை வடக்கு காஸாவிலிருந்து வெளியேற சொல்லிவிட்டு, அந்த வழியில் குண்டுகளை இஸ்ரேல் வீசியிருப்பது திட்டமிட்ட சதிச்செயல் என பல்வேறு அமைப்புக்களும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவிவித்துள்ளன.