இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தினோம்! பகிரங்கமாக அறிவித்த நெதன்யாகு
ஈரான் அனுப்பிய 99% சதவீதமான ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறைந்த எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டுமே நாட்டின் எல்லையை அடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 300 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டதாகவும் மற்றும் சில ஏவுகணைகள் ஈராக் (iraq) மற்றும் யேமனில் (yemen) இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு
இஸ்ரேல் மீதாக தாக்குதலுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளதுடன் பிரித்தானியாவும் தனது போர் விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நிலைநிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பளித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) சுறுக்கமான பதிவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இராணுவத் தளபதி
குறித்த பதிவில் "நாங்கள் இடைமறித்தோம். தடுத்தோம். நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸில் ஈரானிய இராணுவத் தளபதி மற்றும் துணை அதிகாரிகளைக் கொன்றமைக்கு பதிலடியாக தற்போது ஈரான் தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |