லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
தெற்கு லெபனானின் (Lebanon) நபாட்டி பகுதியில் இஸ்ரேல்(Israel) விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படையினர் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் இதனால் காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதிரடி தாக்குதல்
இந்தப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
இதற்கிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |