லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

Israel Lebanon World Gaza
By Shalini Balachandran Oct 28, 2024 08:47 AM GMT
Report

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி...! எச்சரித்த ஈரான் இராணுவம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி...! எச்சரித்த ஈரான் இராணுவம்

இஸ்ரேல் தாக்குதல் 

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா (Gaza) முனைக்கு ஹமாஸ் (Hamas) கடத்தி சென்றது.

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி | Israel Strikes Lebanon 19 Dead

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனுடன், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும்! எச்சரிக்கும் டிரம்ப்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும்! எச்சரிக்கும் டிரம்ப்

அதிரடி தாக்குதல்

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) பயங்கரவாதிகளும் மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி | Israel Strikes Lebanon 19 Dead

குறிப்பாக, லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (27) மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட இதுவரை மொத்தம் இரண்டாயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், சுமார் 12 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026