ஹிஸ்புல்லா விமான தாக்குதல் : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு
வடக்கு இஸ்ரேலில்(israel) இராணுவ நிலை ஒன்றின் மீது நேற்று திங்கட்கிழமை ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தமது தரப்பில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தும் ஒருவர் காயமடைந்துமுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
குறித்த ஆளில்லா விமானத்தை இடைமறிக்க முயன்றபோதிலும் அது தோல்வியடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்ததுடன் , அது இறுதியில் வீரர்களைத் தாக்கி கொன்றதாகவும் குறிப்பிட்டது.
பொறுப்பேற்றது ஹிஸ்புல்லா அமைப்பு
இந்த தாக்குதலை தாமே நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
விமான தாக்குதலுக்கு முன்னர்
இந்த ட்ரோன் தாக்குதலுக்கு முன்பு, லெபனானில் இருந்து கோலன் குன்றுகள் என்ற இடத்தின் மீது சுமார் 30 ரொக்கெட்டுகள் சரமாரியாக ஏவப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை, எல்லையில் நடந்த மோதல்களில் இஸ்ரேலிய தரப்பில் ஒன்பது பொதுமக்கள் இறந்துள்ளனர், அதே போல் 13 படை வீரர்கள் இறந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |