காஸாவை அழிக்கும் இஸ்ரேலின் புதிய ஆயுதம்
காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) குற்றம் சாட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் அறிக்கையில்,
போர் குற்றம்
காஸாவிற்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சிக்கிறது, இது ஒரு போர் குற்றமாகும்.
தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருள்கள் என எந்த மனிதநேய உதவிகளும் காஸாவிற்குள் போதுமான அளவு அனுமதிக்கப்படவில்லை.
விளைநிலங்கள் போன்ற மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் அழித்துவருகிறது.
நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது காஸாவை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |