நத்தாரை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் : ஹரின் பெர்னாண்டோ
இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களைத் தயாரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அமைச்சர் பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையில்,
நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல்
“பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, காலி முகத்திடல் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களில் நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல் நேற்று (17) இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய கிறிஸ்துமஸ் மரம் உட்பட பல கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் இருந்தன.
பண்டிகைக் காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பல விருந்தினர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |