இஸ்ரேலிற்குள் சட்டவிரோதமாக பிரேவேசிக்க முயற்சி: இரு இலங்கை பெண்கள் கைது..!
இஸ்ரேலிற்குள் சட்டவிரோதமாக பிரேவேசிக்க முயற்சி செய்த இரு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரெலிற்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் கடந்த 8 நாட்களாக கடுமையான போர் இடம் பெற்று வருகின்ற நிலையில் உலக நாடுகள் பல அதிருப்தியடைந்து காணப்படுகின்றன.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டது அதனை தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் இயக்கத்தினருக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இலங்கை பெண்கள்
இந்நிலையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரு இலங்கை பெண்களும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த போரினால் 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 4000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.