இஸ்ரேல் போரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்: வைரலாகும் காணொளி
பலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கர்ப்பிணித் தாய் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அவரின் குழந்தை காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று தெற்கு காசாவின் மருத்துவமனையொன்றில் நிகழ்ந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்ரேல் மற்றும் காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 6000 ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதனால் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயின் காப்பாற்றப்பட்ட குழந்தையின் காணொளி அல் ஜசீராவின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடல்நிலை
இந்த குழந்தை தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் நியோ-நேட்டல் பிரிவில் ஒட்சிசன் மற்றும் பிற குழாய்களுடன் இணைக்கப்பட்டு காணப்படுகிறது.
ولادة من رحم المـ ـوت.. طفل يُبصر الحياة بعد استـ ـشـ ـهاد والدته في قـ ـصـ ـف للاحتلال الإسرائيلي على #غزة #غزة_لحظة_بلحظة #الجزيرة_مباشر pic.twitter.com/6l8zb5En9Q
— الجزيرة مباشر (@ajmubasher) October 24, 2023
குழந்தை தொடர்பில் மருத்துவமனையின் வைத்தியர் கூறுகையில், குழந்தை உயிர்பிழைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலிய முற்றுகையால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாசர் மருத்துவமனை வளாகம் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.