காசாவில் தொடரும் மனித அவலம்..! 25 வருடங்களின் பின் 10 மாதக் குழந்தைக்கு இனங்காணப்பட்ட நோய்
காசா (gaza) பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் முதலாவது போலியோ
நோய்த்தாக்கத்திற்கு உள்ளான குழந்தை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நேற்று (16.8.2024) வெள்ளிக்கிழமை பாலஸ்தீனிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் நடத்தி வரும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு பாதிப்பு
கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போரானது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையிலேயே, ஜோர்டானில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மத்திய காசா பகுதியில் இருந்து தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு இந்த நோயை உறுதி செய்ததாக ரமல்லாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலியோ வைரஸ், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது, இது மிகவும் தொற்றுநோயாகும்.
இது சிதைவு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும், மேலும் இது ஆபத்தானது. இது முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |