மீண்டும் காசாவில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி
மத்திய காசாவில் உள்ள அல்-ஜவைதா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் உயரடுக்கு பிரிவின் தளபதி யஹ்யா அல்-மபூஹ் உட்பட ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் நகரின் கடற்கரையோரத்தில் ஒரு கூடாரத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கடலோர ஹோட்டலை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
ஹமாஸிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு
வடக்கு காசாவைச் சேர்ந்த ஆறு போராளிகள் அந்த நேரத்தில் மத்திய பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மூத்த களத் தளபதியான அல்-மபூஹ்வின் மரணம், போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து ஹமாஸின் உயரடுக்குப் படைகளுக்கு ஏற்பட்ட மிக முக்கியமான இழப்புகளில் ஒன்றாகும்.
பொதுமக்கள் பலர் பலி
இதேவேளை இன்று காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் காசாவின் வடக்கே உள்ள அல்-அவ்தா மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.
images -bbc
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
