யாழில் இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய படுகொலை :இழப்பீடு வழங்க பரிந்துரை

Sri Lankan Tamils Jaffna Indian Army
By Theepan Oct 19, 2025 06:29 PM GMT
Report

இந்திய அமைதிகாக்கும் படையினரால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையின் நூல் வெளியீட்டு நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை வெளியீடு  

 வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையினை வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந. அனந்தராஜ் வெளியிட்டு வைத்திருந்தார்.

யாழில் இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய படுகொலை :இழப்பீடு வழங்க பரிந்துரை | Indian Peacekeeping Troops Killing Compensation

இவ் இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் இழப்பீட்டு தொகை

  உயிர் இழப்பிற்கான இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட முடிவினை உதாரணமாக பின்பற்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் இழப்பிற்கு 10 மில்லியன் இலங்கை ரூபாய்களை இழப்பீடாக வழங்கியதன் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 450 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் ஆகும். அதனடிப்படையில் வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் (29,750,574.00) ரூபா இழப்பீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய படுகொலை :இழப்பீடு வழங்க பரிந்துரை | Indian Peacekeeping Troops Killing Compensation

காயமடைந்த 36 பேருக்கான இழப்பீடாக 1.38 மில்லியன் (1,380,025.00) ரூபாவும், அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடாக 57.59 மில்லியன் (57,597,068.00) ரூபாய்களுமாக மொத்தமாக 88.72 மில்லியன் (88,727,667.00) ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 மேற்குறித்த தொகைக்கு 1989 ஓகஸ்ட் முதல் 2025 மே மாதம் வரையான காலத்திற்கான வட்டியாக 4.43 பில்லியன் (4,433,174,088.00) ரூபாய் சேர்த்து 4.5 பில்லியன் (4,521,901,754.00) ரூபாய் தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 வல்வைப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

முன்னதாக வல்வைப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் ஒருவரின் தந்தை சுந்தரலிங்கம் பொதுச்சுடரினை ஏற்றியதை தொடர்ந்து பங்கேற்றியவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழில் இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய படுகொலை :இழப்பீடு வழங்க பரிந்துரை | Indian Peacekeeping Troops Killing Compensation

தொடர்ந்து ந.அனந்தராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார். தொடர்ந்து ஏனையவர்களும் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ந.அனந்தராஜ் இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கையினையும் வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் நூலினையும் வெளியிட்டு வைத்தார்.

நூலின் முதற்பிரதியை பருத்தித்துறை நகராட்சி மன்ற தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அதன் பிரதி மற்றும் இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை என்பன பங்கேற்றிருந்த பிரதிநிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

 இந்நிகழ்வில், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந.அனந்தராஜ், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல், தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற உப தவிசாளர் ஞா.கிஷோர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தி.தயாபரன், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் த.சந்திரதாஸ், உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம், பருத்தித்துறை வர்த்தகர் சங்க செயலாளர் மயூரன், காணி உரிமைகள் அமைப்பை சேர்ந்த முரளிதரன், வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆலயமொன்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆலயமொன்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

மரண சடங்குக்கு சென்று திரும்பிய வவுனியா ஆசிரியருக்கு நேர்ந்த கதி

மரண சடங்குக்கு சென்று திரும்பிய வவுனியா ஆசிரியருக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025