மரண சடங்குக்கு சென்று திரும்பிய வவுனியா ஆசிரியருக்கு நேர்ந்த கதி
பதவியா - ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயிழந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று (18) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பதவியா பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு காரில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா - ஹெப்பட்டிப்பொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இருவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் காரில் பயணித்த வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தம்மரத்ன வித்தியாதன பிரிவேன ஆசிரியர் சஞ்சீவா என்பவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த காரில் பயணித்த இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் ஹெப்பெற்றிபொலாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
