லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: வான்வழி தாக்குதலில் 57 பேர் பலி!
லெபனானில் (Lebanon) இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் (Hamas) தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதல்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது. இஸ்ரேல் ஹமாஸுடன் (Hamas) இந்த போரை நிறுத்தாமல், லெபனானுக்கும் தன்னுடைய தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள ஹெர்மல் பகுதியில் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் நடாத்திய இந்த தாக்குதலில் 57 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-மான்ஷியா கட்டிடம் முழுவதும் இத் தாக்குதலில் சேதமடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |